ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 உயர்வு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏறு முகத்தில் உள்ளது.கச்சா எண்ணை விலையில் ஏற்பட்ட மாற்றம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை மிக அதிகளவில் அதிகரித்தது. கடந்த 2-ந்தேதி ஒரு பவுனுக்கு ரூ.584 அதிகரித்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.27 ஆயிரத்தை தாண்டியது.

அதன் பிறகும் தங்கம் விலை குறையவில்லை. மாறாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 அதிகரித்தது.இதனால் சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.27,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் தங்கம் விலை இன்று இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. இன்று காலை சந்தை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 71 ரூபாய் அதிகரித்தது. பவுனுக்கு 568 ரூபாய் உயர்ந்து ரூ.3,544 ஆக இருந்தது.

இதன் காரணமாக 22 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.28,352 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலங்களில் தங்கம் விலை இந்த அளவுக்கு உயர்வை எட்டியது இல்லை.சர்வதேச நிலவரப்படி தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் சந்தைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டால் தங்கம் விலை பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.தங்கம் போன்று வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வெள்ளி விலை கிராம் ரூ.46.80 ஆக இருந்தது.