குடி, மது, புகையினை விட மிக மோசமானது எது தெரியுமா...?

குடி, மது, புகையினை விட மிக மோசமானது எது தெரியுமா...?

மனிதன் நிலவில் கால் வைத்தான். மற்ற கிரகங்களை தனியே பயணித்து காண துணிகிறான். பல சிலிர்க்க வைக்கும் சாகசங்களை செய்கின்றான். ஆனால் ஒரு தலைவலிக்கும், பல் வலிக்கும் மிகுந்த சங்கடங்கள் கொள்கின்றான். பலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. விழிப்புணர்விற்காக எழுதப்படும் கட்டுரைகள் டி.வி. நிகழ்ச்சிகளைப் படித்தவுடன், பார்த்தவுடன் எனக்கு அதே போல் தான் இருக்கின்றது. எனக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கின்றது என்று பயந்து அதிலேயே மூழ்கி விடுவர். பயம் மனிதனின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. பலர் எப்பொழுதுமே பயத்திலேயே வாழ்கின்றனர். ஏதோ ஒரு காரணம், நிகழ்வு, கற்பனை, முன் நிகழ்ந்த நிகழ்வின் ஆழ்ந்த பதிவு போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் எப்பொழுதும் பயத்திலேயே இருக்கின்றனர். 

‘பயம் என்பது குடி, மது, புகையினை விட மிக மோசமானது.’  தொடர்ந்து பயத்திலேயே இருப்பவன் செயற்திறன் அற்றவனாகி விடுகிறான். ‘அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும்’. 

 
* பயம் என்ற உணர்வு மனிதனுக்கு கட்டுப்பாட்டினைத் தரும். கடமையை ஒழுங்காய் செய்யும். நல்ல ஒழுக்கத்தினைத் தரும். ஆனால் எல்லைகளைத் தாண்டிய பயம் மனித வாழ்வினை அழித்து விடும். 

தொடர் பயம் என்பதே ஒரு நோய். இந்த தொடர் பயத்தால்

* நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 
* இருதய பாதிப்பு ஏற்படும்.
* ஜீரண உறுப்புகளில் பிரச்சினை ஏற்படும். 
* குடல் பாதிப்பு அதிகமாய் இருக்கும். 

* பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு பாதிக்கப்படும். 
* வயதுக்கு மீறிய மூப்பு தோற்றம் ஏற்படும். 
* இளவயதிலேயே இறப்பு ஏற்படும். 
* மறதி அதிகமாகும். 

* சோர்வு ஏற்படும். 
* மனஉளைச்சல் அதிகமாகும். 
* உலகமே பயமானதாகத் தோன்றும். 
* உடல், நோய் பற்றிய பயம் எப்போதும் இருக்கும். 

* வெளி உலகத்தோடு பழக முடியாது.
* தோற்றமே மாறி விடும். 
* அன்றாட பணிகளை செய்ய இயலாது. 
* இருதய துடிப்பு மிக அதிகமாக இருக்கும். 

* தசைகள் வலுவிழந்து இருக்கும். 
* மிக அதிக வியர்வை இருக்கும். 
* வாய் வறண்டு இருக்கும். 
* அதிக மூச்சு வாங்கும். 

இத்தனை பாதிப்புகள் தரும் பயத்தினை தூக்கி எறியுங்கள். 

தேவையற்ற பயங்களில் இருந்து வெளிவர: 

* பயம் உங்கள் வாழ்வினை உடல் நலத்தினை அழிக்கின்றது என்பதனை நன்கு உணர வேண்டும். 
* எதனைப் பற்றி நீங்கள் பயப்படுகின்றீர்கள் என ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்கள் உள் மனமே இதிலிருந்து வெளி வர வழி கூறும். 
* எதனையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என டென்ஷன் பட்டு குறுக்கு வழிகளில் செல்லாதீர்கள். 
* நிகழ் நொடியில் கவனம் செலுத்துங்கள்.
நிகழ்நொடியில்தான் பல செயல்களை சாதிக்க முடியும்.

• வேலை செய்யுங்கள். முழு கவனத்துடன் வேலை செய்யுங்கள்.
• ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.
• நீங்கள் தேவை என நினைத்தால் சற்றும் தயங்காது மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறுங்கள்.
• நல்ல ஆக்கப்பூர்வமான புத்தகங்களைப் படியுங்கள்.

• முறையான உணவு மிக முக்கியம்.
• யோகா, தியானம், உடற்பயிற்சி இவை பெரிதும் உதவும்.
• கடவுள் நம்பிக்கை உடையவர் என்றால் பிரார்த்தனை செய்யுங்கள்.
• ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
• வாழ்வில் வெற்றி பெறுவதே உங்கள் கண்களில் தெரிய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தன்தோற்றத்தினைப் பற்றியும், அவரது நல்ல பண்பு, குண நலன்களை பற்றியும் ஒரு ஆக்கப்பூர்வமான கருத்து இருக்கும். புற்று நோய் போன்ற கடும் நோய்கள் தாக்குதல் ஏற்படும் பொழுதும், சிகிச்சை பெறும் பொழுதும் அவர்கள் தோற்றத்தில், மனதில் சில மாறுதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது அவர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

• முடி கொட்டுதல், •எடை கூடுதல் (அ) குறைதல்
• அறுவை சிகிச்சை தழும்புகள் • மருந்தினால் சில சரும பாதிப்புகள் அவசியம் காரணமாக உறுப்புகளை இழக்க வேண்டி இருத்தல் •சோர்வு போன்றவை ஏற்படலாம்.
இவை தானே சிறிது காலத்தில் முன்னேற்றம் பெறும் என்றாலும் இவர்களது மன உளைச்சல் இவர்களுக்கு கீழ்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
• அதிக சோகம் • படபடப்பு •தனிமையிலேயே இருத்தல்

• பயம் •கோபம் • வெறுப்பு • குற்ற உணர்வு
• எதிர்காலத்தினைப் பற்றிய கவலை என இருக்கும். ஆனால் சிலர்
• நவீன மருத்துவ முன்னேற்ற உதவியினைப் ப்றறிய நிம்மதி
• உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துதல் போன்ற நல்ல பாதிப்புகளையும் வெளிப்படுத்து கின்றனர்.
இது போன்ற மனதினை குலைக்கும் பாதிப்புகளி லிருந்து வெளிவர கீழ் கூறப்பட்டுள்ள குறிப்புகள் நன்கு உதவும்.

• எதற்கும் சிறிது காலம் தேவை என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். இன்று மருத்துவ உலகில் புற்று நோய்க்கு
மிகசிறந்த மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.
* உங்களைப் போன்று பாதிப்பில் இருந்து சிகிச்சையின் மூலம் முன்னேற்றம் பெற்றவர்களுடன் பேசுங்கள். பயம் விலகும்.
* உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுடன் இருங்கள்.

* உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள்.
* எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள்.
* கண்டிப்பாய் ‘கவுன்சிலிங்’ எடுத்துக்கொள்ளுங்கள்.
* உங்களது கோபம் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும் பொழுது உண்மை களையும், சிகிச்சை முறைகளையும் அறிய தவறிவிடுவோம். எனவே கோபத்தினை கைவிடுங்கள்.
* சுய பரிதாபம் வேண்டாம்.

* மருத்துவரிடம் அனைத்து சந்தேகங் களையும் எழுதி வைத்து கேட்டு தெளிவு பெறுங்கள்.
* தொடர் பயம் என்பது
நோய் எதிர்ப்பு சக்தியினை வெகுவாய் குறைத்து விடும்.
* தூக்கமின்மை ஏற்படும்.
* ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
* முறையான உணவு எடுத்துக்கொள்ளமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடல் நலம் வெகுவாய் பின்னடையும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உடல் நலம், மன நலம் இரண்டினையும் மேம்படுத்தும் அழிவுப் பூர்வமான சிந்தனைகள் உடல் நலம், மனநலம் இரண்டினையும் அழித்துவிடும் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.