டெல்லியில் சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் கூட்டம்- தலைவர்கள் பங்கேற்பு

  டெல்லியில் சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் கூட்டம்- தலைவர்கள் பங்கேற்பு

மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் (67), கடந்த 6-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும்,நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.