தி.நகர் பெண் சாந்தி கொலை வழக்கில் 3 நேபாளிகள் கைது...மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

தி.நகர் பெண் சாந்தி கொலை வழக்கில் 3 நேபாளிகள் கைது...மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

சென்னை: தியாகராய நகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேபாள நாட்டை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலை வித்யோதயா பிரதான சாலையில் வசித்து வந்தவர் சாந்தி ,60. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாக வசித்த மூதாட்டி சாந்தி கடந்த 31-ம் தேதியன்று அவரது பங்களாவில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தார். சாந்தி வசித்து வந்த வீடு மற்றும் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என்பதால் சொத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் சாந்தி கொலை வழக்கில் நேபாளத்தைச் சேர்ந்த கோரக்சிங் மற்றும் அவரது நண்பர்களான மான் சிங் மற்றும் லலித் கோஹ்லி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.40,000த்தை பறிமுதல் செய்துள்ள போலீசார், மேலும், ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.