நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை...!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை...!

   
தமிழகத்தில் கிராமப்புற ஊராட்சிகளுக்கான தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் கிராமப்புற ஊராட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வார்டு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.