நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத வழக்கில் நெல்லை, விழுப்புரம், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், தூத்துக்கடி, தர்மபுரி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள்.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: நீர்நிலைகளை காப்பாற்ற, தேவைப்பட்டால் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கலாம். நீர்நிலைகள் முக்கிய ஆதாரம் என்பதால், அதனை பாதுகாக்க கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கமான பணிகளுக்கு இடையே இயற்கையை பாதுகாக்க நேரம் ஒதுக்க வேண்டும். பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீர்நிலைகளை காக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் இடையூறு இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். கீழ்நீதிமன்றங்கள் ஏதும் விசாரிக்கக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம் எனக்கூறினார்.