ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புல்லட் 500 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் புல்லட் 500 மோட்டார்சைக்கிளை டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. புதிய புல்லட் 500 ஏ.பி.எஸ். விலை ரூ.1,86,961 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏ.பி.எஸ். இல்லாத மாடலின் விலையை விட ரூ.14,000 அதிகம் ஆகும். இதுதவிர ஏ.பி.எஸ். வசதியில்லாத மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணப்படவில்லை.

பாதுகாப்பு வசதி தவிர ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 ஏ.பி.எஸ். மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலில் 499சிசி சிங்கிள் சிலிண்டர்  என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்தவரை புல்லட் 500 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகிறது.புல்லட் 500 தவிர, ரெடிட்ச் 350 எடிஷன் மோட்டார்சைக்கிளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏ.பி.எஸ். வசதியை வழங்கியது. கிளாசிக் 350 ரெடிட்ச் எடிஷன் மாடலின் விலை ரூ.1.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.