சுசுகி GSX S750 விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

 சுசுகி GSX S750 விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் சுசுகி அறிமுகம் செய்த GSX-S750 மோட்டாரக்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இம்மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் CKD (கம்ப்லீட்லி நாக்டு டவுன்) ரூட் வடிவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு முந்தைய GSX-S1000 மாடலை போன்று நேக்டு வடிவில் காட்சியளிக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் தோற்றம் கம்பீரமாகவும், ஸ்போர்ட் தோற்றத்தில் முன்பக்கம் கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிளில் 749 சிசி இன்-லைன், 4-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 110 பிஹெச்பி பவர், 81 என்எம் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மிடில்வெயிட் நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டபடி நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

வடிவமைப்பை பொருத்த வரை முன்பக்கம் டிசைன்கள் பெரிய GSX-S1000 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் கூர்மையான கம்பீர தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் மஸ்குலார் ஃபியூயல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறமும் GSX-S750 மெல்லிய ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. 

எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்-டைடி டிசைன் கொண்டிருக்கிறது. இதன் மிகப்பெரிய பின்புற டையர் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டூயல்-சேனல் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதி கொண்ட டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது.

சுசுகி GSX-S750 வரும் நாட்கள் அல்லது வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.7 முதல் ரூ.7.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சுசுகி GSX-S750 விலை இந்தியாவில் அதன் வெற்றிக்கு வித்திடும் என்றும் கூறப்படுகிறது.