முடிவை நோக்கி திரும்பும் டாடா சஃபாரி டைகோர்.

முடிவை நோக்கி திரும்பும் டாடா சஃபாரி டைகோர்.

இந்தியாவில் வடிவமைப்பட்டு, முழுக்க முழுக்க இங்கேயே தயாராகி பின் விற்பனையில் உச்சத்தை தொட்ட டாடா சஃபாரி காரை இந்தியர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.1998ல் வெளிவந்திருந்தாலும், 2000ம் ஆண்டிற்கு பிற்கு இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் டாடா சஃபாரி ஓடிக்கொண்டு இருந்தது.இந்திய சாலைகளில் கலாச்சாரத்தையே மாற்றிய பெருமையை பெற்ற டாடா சஃபாரி, இந்தியாவின் முதல் எஸ்.யூ.வி ரக கார் என்பது குறிப்பிடத்தக்கது.
2.0 லிட்டர் டீசல் எஞ்சின் திறன் பெற்ற இந்த கார், 1998ம் ஆண்டில் அறிமுகமான பிறகு 2003ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியானது.பவர் ஸ்டீயரிங், ஃபூயல் பம்ப் மற்றும் சில மின்சாதன பொருட்களுடன் மேம்படுத்தபட்ட டாடா சஃபாரி கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.இதற்கு பிறகு 2005ம் ஆண்டில் 3-லிட்டர் டைகோர் எஞ்சினுடன் தயாரித்து, காரின் மொத்த வெளிப்புற மற்றும் உட்புற கட்டமைப்புகளை டாடா மாற்றி அமைத்தது.இந்த புதிய மாடலை இந்தியளவில் கொண்டு செல்ல, காரின் பெயரோடு டைகோர் என்பதை இணைத்து, 'சஃபாரி டைகோர்' என புதிய 2005 டாடா சஃபாரி காருக்கு டாடா பெயரை வழங்கியது.இதை தொடர்ந்து சஃபாரி என்ற பெயரை பின்பற்றி, சஃபாரி ஸ்ட்ரோம், சஃபாரி மோனிகர் போன்ற கார்களும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையை ஆக்கிரமிக்க தொடங்கின