மீண்டும் உயர்ந்தத சினிமா கட்டணம்

மீண்டும் உயர்ந்தத சினிமா கட்டணம்

சென்னை: சென்னையில்  சில அரங்குகளைத் தவிர, மற்ற எல்லா ஊர்களிலும் திரையரங்குகளின் மோசமான நிலைமை காரணமாகவே, திருட்டு விசிடி பிரச்சினை இன்னமும் தொடர்கிறலுககரது. மக்கள் தியேட்டர்களுக்குப் போய் வெட்டியாய் பணத்தைச் செலவழிக்க விரும்பாமல், குறைந்த செலவில் வீட்டிலேயே படம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில்தான் ஜிஎஸ்டி வரி விதிப்பை சினிமாவுக்கும் அமல்படுத்தியது.

இந்த ஜிஎஸ்டி என்பது டிக்கெட் கட்டணத்திலிலிருந்து 28 சதவீதம் அரசுக்குத் தரப்பட வேண்டும். ஆனால் தியேட்டர்காரர்களோ திருட்டுத்தமாக, வரி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தினர். இதனால் டிக்கெட்டுகள் விலை ஏகத்துத்துக்கும் உயந்தது. இப்போது மாநில அரசின் உள்ளூர் வரி 10 சதவீதம் அனைத்துத் திரையரங்குகளில் வசூலிக்க புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியாயமாக இந்தத் தொகையை தியேட்டர்கள் தங்கள் வசூலிலிருந்து உள்ளூர் நிர்வாகத்துக்குக் கட்ட வேண்டும்.

ஆனால் அதைக் கட்ட மனமின்றி மீண்டும் மக்கள் தலையிலேயே இந்த வரிச்சுமையையும் திணி்த்துள்ளனர். இதனால் மேலும் மேலும் கட்டணம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியைக் காரணம் காட்டி தியேட்டர் கட்டணத்தை 28 சதவீதம் வரை உயர்த்திய தமிழக திரையரங்குகள், இப்போது உள்ளூர் வரிகளைக் காரணம் காட்டி மேலும் 10 சதவீதத்தை உயர்த்தியுள்ளன. இதன் மூலம் தனி நபர் படம் பார்க்க குறைந்தது ரூ 194 வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனால் இனி படங்களை தியேட்டர்களில்தான் பார்க்க வேண்டுமா என யோசிக்கும் நிலைக்கு மக்களை தள்ளியுள்ளன தியேட்டர்கள்.