தங்கம் விலை சவரனுக்கு  ரூ.352 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு  ரூ.352 உயர்வு

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற- இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் சில நாட்களாக விலை உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது.கடந்த மாதம் தங்கம் விலை ரூ.26 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி கடந்த 2-ந்தேதி வரலாறு காணாத வகையில் ரூ. 27 ஆயிரத்தை தொட்டது.

அன்று தங்கம் பவுனுக்கு ரூ. 27,064-க்கு விற்பனை ஆனது. 3-ந்தேதி பவுனுக்கு ரூ. 264 கூடியது. ஞாயிற் றுக்கிழமையான நேற்று விலையில் மாற்றம் இல்லை.இந்த நிலையில் இன்று தங்கம் பவுனுக்கு ரூ. 352 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ. 27,680-க்கு விற்கிறது. கிராம் விலை ரூ.44 உயர்ந்து ரூ. 3,460 ஆக உள்ளது.

இது தங்கம் விலையில் புதிய உச்சமாக உள்ளது. ரூ.28 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கி இருப்பது பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.வெள்ளி கிலோவுக்கு ரூ. 1300 உயர்ந்து 45 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 45.80 ஆக இருக்கிறது.