தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 சரிவு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 சரிவு...

கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, வர இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக தொழில் துறை சார்ந்த பங்கு முதலீடு மந்தம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக தங்கம் விலை கடந்த 18-ந்தேதி முதல் தினந்தோறும் உயர்ந்து வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 328-க்கு விற்றது.இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக ரூ.592 குறைந்து ரூ.32 ஆயிரத்து 736 ஆக இருந்தது.

இன்றும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 488 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.31 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,061-க்கு விற்கிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வு, பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சர்வதேச சந்தையில் விலை குறைவு காரணமாகவும் தங்கம் விலை சரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.51 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.51.20க்கு விற்கிறது.