தங்கம் விலை சவரனுக்கு ரூ.552 சரிவு...!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.552 சரிவு...!

கொரோனா வைரஸ் பீதியால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்வதால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பவுன் ரூ. 33 ஆயிரத்தை தாண்டியது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ரூ. 4,166-க்கும், ஒரு பவுன் ரூ. 33,328-க்கும் விற்பனை ஆனது.

இன்று கிராமுக்கு ரூ. 69 குறைந்து ரூ. 4,097 ஆகவும், பவுனுக்கு ரூ. 552 குறைந்து ரூ. 32,776 ஆகவும் விற்பனை ஆகிறது.வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ. 52.70-க்கும், கிலோ ரூ. 52 ஆயிரத்து 700-க்கும் விற்பனை ஆகிறது.