இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 39,812 கோடி டாலர் அதிகரிப்பு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 39,812 கோடி டாலர் அதிகரிப்பு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் 3357 கோடி டாலர் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தின் படி இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 39,812 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.இந்தியாவின் அந்நிய செலாவணி சொத்துகளில் அதிகபட்சமாக அந்நிய செலாவணி 280 கோடி டாலர் அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தில் அந்நிய செலாவணி மதிப்பு 37,364 கோடி டாலராக உள்ளது. ரிசர்வ் வங்கி தகவலின்படி, தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 74 கோடி டாலர் அதிகரித்துள்ளது. மொத்த தங்க கையிருப்பு மதிப்பு 2,069 கோடி டாலராக உள்ளது. இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடு அதிகரித்ததன் காரணமாகத்தான் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.