தேசிய ஓய்வூதிய திட்ட வயது வரம்பு 65 ஆக அதிகரிப்பு

தேசிய ஓய்வூதிய திட்ட வயது வரம்பு 65 ஆக அதிகரிப்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) இணைவதற்கான வயது வரம்பு 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இதற்கான வயது வரம்பு 60 ஆக உள்ளது.ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர் கூறுகையில், ஓய்வூதிய திட்ட நிதியை தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்ற ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

 தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு தற்போது 18 முதல் 60 ஆக உள்ளது. இதனை 65 ஆக உயர்த்த நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவேளை இந்தத் திட்டத்தில் பங்களிப்பு செய்வதற்கன வயது வரம்பை 70 ஆக உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறினார்.