பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைவு...!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைவு...!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.அதன்படி, எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.72.95 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.25 காசுகளாகவும் உள்ளது.