இந்தியாவில் நோக்கியா 6 முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் நோக்கியா 6 முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 பிளாஷ் விற்பனைக்கான முன்பதிவுகள் பிரத்தியேகமாக அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 23-ம் தேதி நோக்கியா 6 பிளாஷ் விற்பனை செய்யப்படும் என எச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது.நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 போன்று இல்லாமல் எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 
இந்தியாவில் நோக்கியா 6 விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
அறிமுக சலுகையாக அமேசான் இந்தியா நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1000 கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும் கேஷ்பேக் சலுகை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 10 ஜிபி டேட்டா ரூ.249 விலையில் ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் நோக்கியா 6 வாங்குவோருக்கு கின்டிள் இ புத்தகங்களில் 80 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மேக்மைட்ரிப் தளத்தில் ரூ.2500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.