பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணையிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

அந்த வகையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 31காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.90 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 21காசு குறைந்து லிட்டருக்கு ரூ.70.94ஆகவும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.