பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு...

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு...

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 
 
கடந்த 13 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி முந்தைய தினத்தின் விலையிலேயே விற்பனையானது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே, 42 காசுகள் மற்றும் 46 காசுகள் குறைந்துள்ளன. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.73.99 ஆகவும், டீசல் 69.63 ஆகவும் விற்பனையாகிறது.