பொங்கல் பண்டிகை எதிரொலி: பழங்கள் விலை உயர்வு...காய்கறி விலை வீழ்ச்சி

பொங்கல் பண்டிகை எதிரொலி: பழங்கள் விலை உயர்வு...காய்கறி விலை வீழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டைபோல் இந்தாண்டும் 200 லாரிகளில் கரும்புகள் வந்துள்ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தமிழகத்தின் ஈரோடு, தேனி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வழக்கம்போல் 10 லாரிகளில் கரும்பு வரும்.தற்போது 15 லாரிகளில் வந்துள்ளது. இவற்றில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் வாழைப்பழம் ஒரு தார் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதுதவிர ஈரோடு, சேலம், ஆந்திர மாநிலம் காளகஸ்தி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மஞ்சள் கொத்து, 5 கொத்து கொண்ட ஒரு கட்டு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மஞ்சள் வாழை பழம் ஒரு தார் இதற்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பச்சை பழம் கிலோ 40 ரூபாய்க்கும், ஏலக்கி பழம் ரூ.80க்கும், செவ்வாழை கிலோ ரூ.100க்கும், மலைவாழை கிேலா 120க்கும் கிடைக்கிறது. பூவன் பழம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், ஒரு வாழைக்காய் 12 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.