வங்கி மோசடியை தொடர்ந்து கடன் உத்தரவாத கடிதம் முறையை ரத்து செய்தது ஆர்பிஐ

வங்கி மோசடியை தொடர்ந்து கடன் உத்தரவாத கடிதம் முறையை ரத்து செய்தது ஆர்பிஐ

டெல்லி: வங்கிகளில் தொடரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியை தொடர்ந்து எல்ஓயு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஊழியர்களின் உதவியுடன் நீரவ் மோடி ரூ.12,646 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் எல்.ஓ.யு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பல ஆயிரம் கோடி வங்கி மோசடியை அடுத்து கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் மோசடியை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.