இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு

இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 22 பைசா சரிவடைந்து 72.91 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. இந்த சரிவு இதுவரை இல்லாத ஒன்றாகும்.அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது

டாலரின் தேவை கடுமையாக உயர்ந்ததால் அதன் மதிப்பும் அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்து வருகிறது.உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.