பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு

மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியை வசூலிக்கின்றன.பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.இதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல. நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும்