உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் புகார் எதிரொலி :பங்கு சந்தை சரிவு

உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் புகார் எதிரொலி :பங்கு சந்தை சரிவு

மும்பை: வரலாற்றில் முதன்முறையாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகீர் புகார் கூறினர். அவர் முடிவுகளை  தன்னிச்சையாகவே எடுக்கிறார் என்றும் மற்ற மூத்த நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் புகார் கூறினர்.நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பால், ஸ்திரத்தன்மை மீது  முதலீட்டாளர்களுக்கு ஐயம் எழுந்தது. எனவே, தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தையில் பங்குகள் சரிந்தன.

இன்று நண்பகல் 12.15 மணி நிலவரப்படி, மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் 34550.2 என்ற அளவுக்கு சரிந்தது. பிரஸ் மீட் ஆரம்பித்ததும் இந்த நிலையில் இருந்த பங்கு சந்தை, பிரஸ் மீட் முடியும்போது மதியம் சுமார் 12.35 மணிக்கு 34423.8 என்ற அளவுக்கு மேலும் சரிந்தது.