இந்தியாவில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதி

இந்தியாவில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதி

உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதி அளிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ஜியோ மூலம் ஒரு ஜிபி கட்டணம் ரூ. 18.50-க்கு அதாவது 0.26 டாலர் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் சராசரியாக ஒரு ஜிபி கட்டணம் ரூ. 600 என்ற அளவில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொத்தம் 230 நாடுகளில் உள்ள டேட்டா கட்டணம் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவில் 0.26 டாலருக்கு ஒரு ஜிபி வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் இங்கிலாந்தில் 6.66 டாலராக உள்ளது. இதுவே அமெரிக்காவில் 12.37 டாலராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.