வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஜியோ.. புதிய ஆஃபரை வெளியிட்டார் முகேஷ் அம்பானி

வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஜியோ.. புதிய ஆஃபரை வெளியிட்டார் முகேஷ் அம்பானி

இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ சில நாட்களுக்கு முன்பு தனது 399 சேவை திட்டத்தின் நாட்களைக் குறைத்தது சேவைக் கட்டணத்தைத் தடாலடியாக 15 சதவீதம் அதிகரித்து. இது முன்னணி நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ள விலை அளவுகளை ஒப்பிடுகையில் பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களை நாடிச் சென்றனர்.ஜியோவின் கட்டண உயர்வாலும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் கூட்டணியாலும் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 10 வருட உயர்வை அடைந்தது.

இதேபோல் பிற டெலிகாம் நிறுவனங்களும் கணிசமான உயர்வைச் சந்தித்து. இதே நிலை தொடர்ந்தால் ஜியோ மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்பதை ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி சுதாரித்துக் கொண்டார்.ஜியோ தனது கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியதன் மூலம் தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக 50 ரூபாய் மதிப்பில் 8 கூப்பன்களை வழங்கியது. இதனை அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் ஜியோ அறிவித்தது.