மும்பை பங்கு சந்தை; 38 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

மும்பை பங்கு சந்தை; 38 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

மும்பை: மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 162.56 புள்ளிகளை கடந்து முதன்முறையாக 38,050.12 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 45.20 புள்ளிகளை கடந்து 11,495.20 புள்ளிகளாக புதிய அளவை எட்டியுள்ளது.  இது அதற்கு முந்தைய 11,459.95 புள்ளிகள் என்ற நேற்றைய புதிய அளவை கடந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் குறியீடு மதிப்புகள் உயர்ந்து வருகின்றன.  
இந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடானது 38 ஆயிரம் புள்ளிகளை முதன்முறையாக தொட்டுள்ளது.