ரூ.2,000 நோட்டு வாபசில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்: ஜெட்லி

ரூ.2,000 நோட்டு வாபசில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்: ஜெட்லி

புதுடில்லி: கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது.

இதனையடுத்தே இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியது. மத்திய அரசு திரும்ப பெற உள்ளது என்றெல்லாம் கூறப்பட்டது, அதனை மத்திய அரசு நிராகரித்தது.ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் எண்ணம் ஏதும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.