இஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கி

இஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கி

இஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விளக்கம் அளித்திருக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆர்பிஐ இவ்வாறு பதில் அளித்திருக்கிறது. இஸ்லாம் மதத்தின் படி பணத்தை வட்டிக்கு விடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மேலும் கூறியிருப்பதாவது: இஸ்லாமிய வங்கி தொடங்குவது குறித்து மத்திய அரசுடன் இணைந்து பரிசீலனை செய்தோம். அனைத்து விதமான வாய்ப்புகள் மற்றும் அனைவருக்கும் வங்கி சேவை வழங்க வேண்டும் என்பதால் இஸ்லாமிய வங்கியை கட்டமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது.