பண மதிப்பு நீக்கம் எதிரொலி: டிஜிட்டல் பரிவர்த்தனை 23% உயர்வு

பண மதிப்பு நீக்கம் எதிரொலி: டிஜிட்டல் பரிவர்த்தனை 23% உயர்வு

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 23% உயர்ந்துள்ள நிலையில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்‌தனைகள் 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பழிப்பு செய்யப்பட்டன. அதன்பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும்வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் ’டிஜிட்டல் லக்கி கிராகக் யோஜனா’,’டிஜிதன் வியாபார் யோஜனா’ ஆகிய திட்டங்களை அறிவித்து மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்குவித்தது.

இந்நிலையில் இதனால் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் 23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. IMPS எனப்படும் 24 மணி நேர பண பரிவர்த்தனை நடைமுறை, 2 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Loading...