சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி

சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சில தினங்களாக இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அமெரக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 74:46 ஆக சரிந்தது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவு இதுவரை இல்லாத ஒன்று.

இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்றைய வர்த்தக நேர இறுதியில் 34,760 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஆயிரம் புள்ளிகள் வரை மளமளவென சரிந்து, 33,723 புள்ளிகளை தொட்டது.இதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 350 புள்ளிகள் வரை சரிந்து 10,155 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டது