சரித்ரத்தில் முதன் முறையாக 32,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்

சரித்ரத்தில் முதன் முறையாக 32,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்

மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 32,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகி நிறைவடைந்துள்ளாது.மும்பை பங்குச் சந்தையில் இன்று (13.7.17) காலை முதலே சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.இதன் விளைவாக சென்செக்ஸ் குறியீட்டு எண் முதல் முறையாக 32,000 புள்ளிகளை எட்டியுள்ளது. மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 9,879 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 232.56 புள்ளிகள் உயர்ந்து 32,037.38 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 75.60 புள்ளிகள் உயர்ந்து 9,891.70 புள்ளிகளாக உள்ளது.


Loading...