டெல்லியில் 20 வயது பெண்ணை 5 சிறுவர்கள் சேர்ந்து கூட்டுபாலியல் பலாத்காரம்

டெல்லியில் 20 வயது பெண்ணை 5 சிறுவர்கள் சேர்ந்து கூட்டுபாலியல் பலாத்காரம்

புதுடெல்லி: புதுடெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் பார்ட் டைம் வேலை பார்க்கும் 5 பேரும் அவ்வழியாக நடந்து சென்ற 20 வயது பெண்னை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.சத்தம்போட்டோலோ அல்லது நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினாலோ போலீஸ்க்கு போனாலோ கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அந்த பெண் சத்தம்போடாமல் இருந்துள்ளார்

பின்னர் மறுநாள் வியாழக்கிழமை மதியம் தனது உறவினர் ஒருவரிடம் அந்த பெண் நடந்ததை கூறி கதறியுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.கூட்டு பலாத்காரம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.