சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை எரித்து கொன்ற கொடூரம்

சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை எரித்து கொன்ற கொடூரம்

சென்னை: ஒருதலைக்காதலால் ஆதம்பாக்கத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் இந்துஜா என்பதாகும். இவர் ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரை ஆகாஷ் என்பவர் காதலித்து வந்தார். இவரது காதலை இந்துஜா ஏற்க மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்துஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று விட்டு தப்பினார் ஆகாஷ். தலைமறைவாக இருந்த ஆகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் இந்துஜாவும், ஆகாஷ் என்பவரும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள இந்துஜாவை ஆகாஷ் காதலிப்பதாக கூறியுள்ளார்.இந்துஜா அவரது காதலை ஏற்க மறுத்து விட்டார்கையில் பெட்ரோல் கேனுடன் வந்த ஆகாஷ், நின்று கொண்டிருந்த இந்துஜா, அவரது தயார், சகோதரி மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். மூவருமே எரிந்தனர். இதில் இந்துஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.