சென்னை அருகே துப்பாக்கி சூட்டில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை அருகே துப்பாக்கி சூட்டில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தவர் முகேஷ்.இன்று அவர் வேங்கடமங்கலத்தில் உள்ள  நண்பர் வீட்டிற்கு சென்றபோது அங்கு  அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் முகேஷ் குண்டு காயம் அடைந்து சுருண்டு விழுந்தார்.துப்பாக்கி சூடு நடந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் படுகாயம் அடைந்த மாணவர் முகேசை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார்.

தப்பி ஓடிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மாணவர்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.