மதுரையில் நகை அடகுக்கடையில் நேற்றிரவு 1483 சவரன் கொள்ளை

மதுரையில் நகை அடகுக்கடையில் நேற்றிரவு 1483 சவரன் கொள்ளை

மதுரை நரிமேடு மருதுபாண்டியர் நகரில் கோபிநாத் என்பவர் நகை அடகுக்கடையை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் புகுந்தனர்.அவர்கள் வெல்டிங் கருவிகள் மூலம் லாக்கரை உடைத்து அதிலிருந்த ஆயிரத்து 483 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இந்நிலையில், இன்று பிற்பகல் கடைக்கு சென்று பார்த்த கோபிநாத் நகைகள் கொள்ளை போனது குறித்து அறிந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.