கணவரை அடித்து தாக்கி மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்.. உ.பி.யில் பரிதாபம்

கணவரை அடித்து தாக்கி மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்.. உ.பி.யில் பரிதாபம்

முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் கணவர் கண்முன்னே மனைவியை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸாஃபர்நகரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தையை மருத்துவமனைக்கு கணவனும் (35), மனைவியும் (30) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். அப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் இவர்கள் வந்த வாகனத்தில் கார் ஒன்று வழிமறித்தது. இதனால் தம்பதி அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது காரில் இருந்தவர்கள்அந்த பெண்ணின் கணவனை தாக்கி .  

அவரை கட்டி போட்டனர். பின்னர் மனைவியை கரும்பு தோட்டத்திற்கு கொண்டு சென்றனர்.குழந்தையை கொன்றுவிடுவதாக அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த கும்பல் அவரை கூட்டாக பலாத்காரம் செய்தனர். இதையடுத்து சப்தமிட முயற்சித்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டிவிட்டு அவர்கள் 4 பேரும் தப்பிவிட்டனர்.உதவி செய்யக் கோரி தம்பதியின் சப்தம் கேட்டு அங்கு வந்த சில விவசாயிகள் அவர்களுக்கு உதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.