ம.பியில் மரண தண்டனை மசோதாவுக்கு பின் நடந்த முதல் பாலியல் பலாத்காரம்

ம.பியில் மரண தண்டனை மசோதாவுக்கு பின் நடந்த முதல் பாலியல் பலாத்காரம்

12 வயதிற்கு  குறைவான வயதுள்ள சிறுமிகளை  பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா மத்தியப் பிரதேச சட்டப் சபையில்  கடந்த திங்கள்கிழமை  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . 

இந்த மசோத நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களில்  மத்திய பிரதேசத்தின் டெபுலூர் தெஹில்  மாவட்டத்தின் சந்தர் என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் அவரது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.

அதே கிராமத்தில் உள்ள சந்தீப் சாங்லால் ( வயது 19) என்பவர் பாதிக்கபட்ட சிறுமியின் வீட்டில் குழந்தைகளுடன் டிவி பார்த்து கொண்டு இருந்தார். வீட்டில்  சிறுமியின் பெற்றோர்கள் இல்லை.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி குழந்தைகள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.