கேரளாவில் பரபரப்பு: கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி சடலம் மீட்பு

கேரளாவில் பரபரப்பு: கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி சடலம் மீட்பு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் மவுண்ட் தாபோர் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த சுஷான் மேத்யூ (55) என்ற கன்னியாஸ்திரி இன்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.காலை 9 மணிக்கு கிணற்றின் சுற்றுச்சுவறில் ரத்தக்கறை இருந்ததை கண்டெறிந்த பள்ளி ஊழியர்கள், கிணற்றின் உள்ளே பார்க்கும் போது சுஷான் சடலமாக மிதந்துள்ளார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.