சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.43 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்...

 சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.43 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்...

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் வெளிநாட்டு விமானங்களில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக ஒரு விமானம் சென்னைக்கு வந்தது. இந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தபோது எதுவும் சிக்கவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் இறங்கியதும் விமானத்தில் ஏறி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது விமானத்தின் கழிவறையில் 2 பொட்டலங்கள் இருந்தன. சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது 12 தங்க கட்டிகள் இருந்தன. அதில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திவந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்லும் என்பதால் கடத்தல் ஆசாமிகள் கழிவறையில் மறைத்துவைத்துவிட்டு சென்றார்களா? எனவும் விசாரணை நடக்கிறது.