மேற்கு வங்காளத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

மேற்கு வங்காளத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்


மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட ஆங்கில பஜாரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிலர் பாம்பு விஷம் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று அந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது ஒரு அறையில் இருந்த 3 பேர் கன்டெய்னர் ஒன்றில் பாம்பு விஷம் வைத்திருந்தனர். சர்வதேச சந்தையில் சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள அந்த பாம்பு விஷத்தை போலீசார் உடனடியாக கைப்பற்றினர். பின்னர் அந்த 3 பேரையும் அவர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த பாம்பு விஷம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எங்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருந்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ரூ.1½ கோடி பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.