4 வயது சிறுவனை வெறிநாய்கள் கடித்துக் குதற காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்

4 வயது சிறுவனை வெறிநாய்கள் கடித்துக் குதற காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில், கூலி தொழில் செய்யும் தம்பதியின், 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு சுற்றித் திருந்த தெருநாய்கள், திடீரென்று சிறுவன் மீது பாய்ந்து  அவனை கடித்து குதறின. இதைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் சிறுவனை நாயிடம் இருந்து காப்பாற்றாமல், தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.தங்களது மகன் நாயிடம் கடி வாங்குவதை அறிந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து நாயிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பல நாய்கள் கடித்ததில், உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டதால், சிறுவன் இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், தங்கள் வீட்டருகே, ஏராளமான வெறி நாய்கள் சுற்றித் திரிவதாக, ஒரு வாரத்திற்கு முன்பே, நகராட்சியில் புகார் அளித்ததாகவும், ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சிறுவன் அநியாயமாக உயிரிழந்துள்ளான் என்று கூறியுள்ளார். சிறுவனை வெறிநாய்கள் கடித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த பொதுமக்கள் அச்சிறுவனை காப்பாற்றமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.