திரிபுரா மாநிலத்தில் இளம் பத்திரிகையாளர் படுகொலை

திரிபுரா மாநிலத்தில் இளம் பத்திரிகையாளர் படுகொலை

அகர்தலா: திரிபுராவில் செய்தி சேகரிக்க டிவி சேனல் இளம் பத்திரிகையாளர் சாந்தனு போம்விக் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திரிபுராவில் பழங்குடி இன அமைப்புகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. மான்ட்வாய் என்ற பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்து வருகிறது.

இதை பதிவு செய்ய சென்ற சாந்தனு போம்விக் (வயது28) என்ற பத்திரிகையாளரை பழங்குடி இன அமைப்பினர் வெட்டி படுகொலை செய்துள்ளனர். போலீசார் அவரை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் கலவரம் பரவாமல் தடுப்பதற்காக மேற்கு திரிபுரா மற்றும் கோவாய் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.