திருச்சி நகைகடையில் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை...!

திருச்சி நகைகடையில் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை...!

திருச்சி பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல நகைகடையில் இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர்.
கடையின் கதவை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடையின் பல்வேறு பகுதிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி இருந்தன.

நேற்றிரவு பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த நகைகளை அள்ளிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கொள்ளை போன நகை கடைக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.50 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.