அடுக்குமாடி குடியிருப்பில் தாய், மகள் குத்திக்கொலை... 15 வயது சிறுவன் மீது சந்தேகம்

அடுக்குமாடி குடியிருப்பில் தாய், மகள் குத்திக்கொலை... 15 வயது சிறுவன் மீது சந்தேகம்

டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியும், அவர்களது 15 வயது மகனும், மகளும்(12) வசித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை வேலை காரணமாக நீண்ட பயணமாக கணவர் வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த வீட்டில் இருந்த தாயும், மகளும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி நொய்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தாயும், மகளும் ஸ்குரு டிரைவரால் குத்திக் கொள்ளப்பட்ட நிலையில் ஒரு போர்வைக்குள் சுற்றி வைக்கப்பட்டு பிணமாக கிடந்தனர். இருவரின் உடல்களிலும் கடுமையான காயங்களும் காணப்பட்டன.அதேநேரம் 15 வயது சிறுவனை மட்டும் காணவில்லை. அவன்தான் தாயையும், தங்கையையும் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தாய், மகள் இருவருடைய பிணத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.