சென்னை பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா

சென்னை பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், பெண்கள் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அறையில், சீரமைப்பு பணிகள் எனக்கூறி அடிக்கடி மாற்றம் செய்து வந்தார். இதனால், சந்தேகமடைந்த, அங்கு தங்கியிருந்த பெண்கள் ஆய்வு செய்தனர். அதில், விடுதியின் கழிப்பறை, படுக்கையறை உள்ளிட்ட இடங்களில் கண்ணுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், விடுதி அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், 16 மொபைல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன் சஞ்சீவையும் கைது செய்தனர்.