கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு: இயக்குனர் பைஜூ

கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு: இயக்குனர் பைஜூ

பாவானா கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில், கலாபவன் மணியின் மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு உள்ளதாகவும். அவர் மீது விசாரணை நடத்த அவரது தம்பி ராமகிருஷ்ணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த நிலையில் பிரபல மலையாள சினிமாபட இயக்குனர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் நடிகர் கலாபவன் மணியின் சாவுக்கு திலீப்தான் காரணம். அதற்கு உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.
கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரகரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குனர் பைஜூவும் இன்று புகார் அளிக்க உள்ளார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.