டெல்லியில் கொடூரம்- சிறுவனை கொன்று சூட்கேசுக்குள் வைத்திருந்த வாலிபர் கைது...

 டெல்லியில் கொடூரம்- சிறுவனை கொன்று சூட்கேசுக்குள் வைத்திருந்த வாலிபர் கைது...

மேற்கு டெல்லியின் நாதபுரா பகுதியில் வசித்து வரும் ஒரு பெற்றோரின் மகன் அசிஷ்(வயது 7) கடந்த மாதம் 7-ந்தேதி திடீரென மாயம் ஆனான். இதுபற்றி டெல்லி சுவரூப் நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிறுவனின் பெற்றோர் வசித்த தெருவில் இருந்த சில தெருக்கள் தள்ளியிருந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டில் குடியிருந்த அவதேஷ்(27) என்ற வாலிபரிடம் இதுபற்றி விசாரித்தபோது வீட்டில் பெருச்சாளிகள் செத்துக் கிடப்பதால் துர்நாற்றம் வருகிறது என்று கூறியுள்ளார்.

எனினும் தொடர்ந்து நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் செய்தனர்.இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ஒரு சூட்கேசை திறந்து பார்த்தபோது, சிறுவன் அசிஷ் உடல் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.சிறுவனின் பெற்றோர் மீது இருந்த முன்விரோதத்தில் அவர் அசிஷை கொன்றுள்ளார். கைதான அவதேஷ் தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்றும், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத படித்து வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் நடித்துள்ளதும் தெரிய வந்தது.