பள்ளியை விட்டு நீக்கப்பட்ட மாணவன் ஆசிரியை கத்தியால் குத்தினான்

பள்ளியை விட்டு நீக்கப்பட்ட மாணவன் ஆசிரியை கத்தியால் குத்தினான்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பள்ளியை விட்டு நீக்கப்பட்ட மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கழுக்குன்றம் அருகே சோகண்டியிலுள்ள தனியார் பள்ளியில் இன்று ஆசிரியர் பூங்கொடி என்பவரை மாணவன் ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான். 9ம் வகுப்பு படித்து வந்த மாணவன் யோகேஷ் பள்ளியை விட்டு மார்ச் மாதம் நீக்கப்பட்டுள்ளார். சரியாக படிக்கவில்லை என்று ஆசிரியர் பூங்கொடி பரிந்துரைத்ததின் பேரிலேயே யோகேஷ் பள்ளியை விட்டு நீக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபத்தில் இருந்த மாணவன் யோகேஷ் இன்று பள்ளிக்கு வந்து பள்ளி வளாகத்தில் வைத்தே ஆசிரியர் பூங்கொடியை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த பூங்கொடி அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் வந்து மணாவன் யோகேஷை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மாணவன் யோகேஷ் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஆசிரியர் பூங்கொடி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.