தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்மார் நியமனம்

தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்மார் நியமனம்

தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய முதன்மைச் செயலாளராக தீரஜ்மார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலராக தீரஜ்குமார் கூடுதல் பொறுப்பு வகிப்பார். கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் கதர்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

போக்குவரத்துத் துறை செயாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், எம்பிசி. மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன முதன்மை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.எரிசக்தித் துறை முதன்மை செயலாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.